அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை: போக்குவரத்து துறை விளக்கம்


பிரச்சினை செய்த காவலர்

சென்னை: காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது.

திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்குச் சென்ற அரசு பேருந்தில் நாங்குநேரியில் ஏறிய காவலர் ஆறுமுகப்பாண்டி, காவல்சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது எனக் கூறிவாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இது குறித்து போக்குவரத்துத் துறை கூறியிருப்பதாவது: காவலர்கள் பேருந்தில் பயணிக்கும்போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் அரசிடம் இருந்து போக்குவரத்து துறை திரும்ப பெற்றுக் கொள்கிறது.

எனவே, நாங்குநேரி சம்பவத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது..

x