“ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்” - அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் உறுதி 


சென்னை: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். “தற்போதைய பயணம் மூலம் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களையும் தொடர்ந்து கண்காணித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன். இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தை 2030-க்குள் ஒரு டிரில்லியன் மாற்றக் கூடிய இலக்கை விரைவாக அடைவோம்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். காலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, அமெரிக்கா பயணத்துக்காக அவர் இரவு 8.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக மூத்த நிர்வாகிகள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியது: “அரசு முறைப் பயணமாக நான் அமரிக்கா செலகிறேன். தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு, வரும் செப்.14-ம் தேதி திரும்பி வருவது மாதிரி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்க்க இது போன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

ஏற்கெனவே, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கு பயணம் செய்ததன் மூலம் தமிழகத்துக்கு பல்வேறு முதலீடுகள் வந்துள்ளன. இந்த பயணங்கள் மூலம் 18, 521 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.10,882 கோடி மதிப்பிலான 17 ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதில், ரூ. 990 கோடி முதலீட்டுக்கான 5 திட்டங்கள் தற்போது உற்பத்தியை மேற்கொண்டு வருகின்ற.

கடந்த ஆக.21-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் இந்த 5 திட்ஙட்களில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஹைபி நிறுவனம் மற்றும், ஜப்பானின் ஒமரான் நிறுவன திட்டத்தையும் தொடங்கி வைத்தேன். இந்த திட்டங்களால் மட்டும், 1538 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ரூ. 3796 கோடி மதிப்பிலான 3 திட்டங்களின் கட்டுமானப்பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் உள்ளது.

ஆக.21-ம் தேதி மாநாட்டில், ஜப்பானின் மிட்சுபா, செட்ராய்ட் நிறுவனங்கள் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியுள்ளேன். ரூ.3,540 கோடி மதிப்பிலான 3 திட்டங்கள் பல்வேறு முன்னேற்ற நிலையில் இருக்கிறது. ரூ.438 கோடி 2 விரிவாக்க திட்டங்கள் விரைவில் செயல்படுத்தும் நிலையில் உள்ளது. ரூ. 2100 கோடி மதிப்பிலான 4 திட்டங்களை பொறுத்தவரை, அந்தந்த நிறுவனங்களின் தொழில் முதலீட்டு சூழல் காரணமாக சிறிய தாமதம் ஏற்பட்டள்ளது.
நாங்கள் கையெழுத்திட்ட திட்டங்கள் அனைத்தும் துரிதமான நிலையில் செயல்படுத்தப்படுகிறது. அதனால் தான், இது போன்ற பயணஙகள் முக்கியமானவை.

திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின், 3 ஆண்டுகளில் இதுவரை 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழு்ததானது. இவற்றின் மொத்த மதிப்பு, ரூ.9,99,093 கோடியாகும். இதன் மூலம், 18,89,234 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில், 234 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கி, 4,16,717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டது. மற்ற ஒப்பந்தங்கள் படிப்படியாக அடுத்து செயல்பாட்டுக்கு வரும்.

கடந்த பயணங்கள் மூலம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போல், தற்போதைய பயணம் மூலம் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களையும் தொடர்ந்து கண்காணித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன். இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தை 2030-க்குள் ஒரு டிரில்லியன் மாற்றக் கூடிய இலக்கை விரைவாக அடைவோம். இதற்காக உலகின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க அமெரிகாவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவுக்கு செல்கிறேன். அங்கு அமரிக்க வாழ் தமிழர்களையும் சந்திக்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.

x