நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்க ராகுல் காந்திதான் காரணம்: முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி தகவல்


சென்னை: நடிகர் விஜய் கட்சி தொடங்க ராகுல் காந்திதான் காரணம் என முன்னாள் எம்எல்ஏ விஜயதாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விஜயதரணி அளித்த பேட்டியில் கூறியதாவது: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த தற்கு காரணமே ராகுல் காந்தி தான். ராகுல் காந்தியை, விஜய் ஒரு முறை நேரில் சந்தித்தார். அப் போது, காங்கிரஸ் கட்சியில் தனக்கு ஒரு பொறுப்பு வழங்க வேண்டும் என விஜய், ராகுலிடம் கேட்டார். அதற்கு ராகுல்காந்தி, தமிழகத்தில் மிகப்பெரிய நடிகராகவும், அதிக ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ள நீங்கள், தனி கட்சியை தொடங்குங்கள். எதற்காக ஒரே ஒருபொறுப்புக்கு ஆசைப்படுகிறீர்கள் என்று அப்போது நடிகர் விஜய்யிடம் கூறினார்.

ராகுல் காந்தி கூறியதன், பிரதிபலிப்பாக தான் தற்போது நடிகர் விஜய்கட்சியை தொடங்கி உள்ளார். இதுதான் உண்மை. அதனால், காங்கிரஸ் கட்சிக்கும், நடிகர் விஜய்க்கும் நல்ல உறவு இருக்கும். இதன் பிறகு விஜய் அரசியலில் நிலைத்து நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

x