வண்ண மீன்கள் வர்த்தக மையம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் இன்று அடிக்கல்


சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை வில்லிவாக்கம் சிவசக்தி காலனி, பாடி மேம்பாலத்தின் கீழ், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், 4 ஏக்கர் பரப்பில் ரூ.53.50 கோடியில் உலகத்தரம் வாய்ந்த கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.

தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய இந்த மீன் சந்தை கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு நேரில் சென்று அடிக்கல் நாட்டுகிறார்.

இதுதவிர, ராயபுரத்தில் புதிய சமுதாய நலக்கூடம், புரசைவாக்கம் கான்ரான் ஸ்மித் சாலையில் நவீன சலவைக் கூடம், புழல், ரெட்டேரி, கொளத்இதுதவிர, ரூ.5.22 கோடி மதிப்பில் அயனாவரம் நவீன சலவைக்கூடம் மற்றும் நியாய விலைக் கடைகள், கொளத்தூர் உணவுப்பொருள் வழங்கல் மண்டல உதவி ஆணையர் அலுவலகம், புதிய வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 4 முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.

x