மெட்ரோ ரயில் பணிக்காக இரவு நேரங்களில் போக்குவரத்து மாற்றம்


சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக, மவுண்ட் பூந்தமல்லி ரோடு - புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா வரை செல்லும் ஒரு மார்க்கத்தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று (25-ம் தேதி) முதல் நாளை (27-ம் தேதி) வரை இரவு நேரங்களில் (இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை) போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பில் உள்ள மவுன்ட் பூந்தமல்லி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, அவர்கள் புதிய சாலையை நோக்கி இடதுபுறம் திரும்புவார்கள். (புஹாரி ஹோட்டலுக்கு எதிரேஉள்ள போர் கல்லறை - பெல் (BEL) ராணுவ சாலை சந்திப்பில்) டிஃபென்ஸ் காலனி 1-வது அவென்யூ (வலதுபுறம்) -கண்டோன்மென்ட் சாலை (இடதுபுறம் திருப்பம்) - சுந்தர் நகர் 7-வது குறுக்கு - தனகோட்டி ராஜா தெரு - சிட்கோஇண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு சாலை - ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு வழியாக செல்லலாம்.

x