சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:
காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமை, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஆண்டொன்றுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டிய நீரின் அளவையும் நிர்ணயித்துள்ளது. ஆனால், உபரி நீரை மட்டுமே கர்நாடகா திறக்கிறது.
இந்நிலையில், கர்நாடக அரசு மத்திய அரசுக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளது. அதில் மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் வழங்குமாறும், மேகேதாட்டு திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் எவ்விதத் தடையாணையையும் விதிக்கவில்லை என்றும் செய்தி வந்துள்ளது
இதுகுறித்து ஸ்டாலின் கருத்து ஏதும் தெரிவிக்காமல் உள்ளார். டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்க முயற்சி செய்யும் கர்நாடக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்து, மேகேதாட்டு அணைத் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.கர்நாடக அரசின் மனுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்