வயதான நடிகர்களால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை: ரஜினி பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி


காட்பாடி: வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயேநல்லூர் பகுதியில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 119-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிருபானந்தவாரியார் சிலைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

அப்போது அவரிடம் பேட்டியெடுத்த செய்தியாளர்கள், சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து கேட்டனர். அதற்கு, ‘‘நடிகர் ரஜினிகாந்த், பழையவர்களை வைத்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் சிரமப்படுவதாக கூறியுள்ளார். மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து,தாடி வளர்த்து,சாகிற நிலையில் கூட நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அதை மறந்துவிட்டு ரஜினிகாந்த் ஏதேதோ பேசுகிறார்" என்று கூறினார்

x