அதிமுக செயற்குழு கூட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது: பெங்களூரு புகழேந்தி மனு


சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் ஆக.16-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளனர். இதை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்று ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பழனிசாமி தன்னைத்தானே பொதுச்செயலாளர் என குறிப்பிட்டது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். ஏற்கெனவே பழனிசாமி அனுப்பிய கட்சி தொடர்பானமுடிவுகளை தேர்தல் ஆணையம் அதன் கோப்புகளில் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது.

இறுதித் தீர்ப்பு அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைய செயலர் ஜெயதேவ் லஹரி ஆணையாக பிறப்பித்துள்ளார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவசர செயற்குழுவை கூட்டியது சட்டத்துக்கு புறம்பானது.

பழனிசாமி தன்னை பொதுச்செயலாளர் என கூறுவதன் மூலம் கட்சியை தன்வசப்படுத்தி அதன்மூலம் பலன்களை அனுபவித்து வருகிறார். பழனிசாமி, அவசர செயற்குழு மூலம் எடுத்த முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

x