காங்கிரஸில் இணையும் நடிகை விஜயசாந்தி?: பாஜகவில் சீட் கிடைக்காத அதிருப்தி!


நடிகை விஜயசாந்தி

தெலங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில், நடிகை விஜயசாந்தி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவருமான விஜயசாந்தி கடந்த 1998-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாஜக மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறிய விஜயசாந்தி, 2020-ம் ஆண்டு பாஜகவில் மீண்டும் இணைந்தார்.

விஜயசாந்தி

இந்த நிலையில் தெலங்கானாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விஜயசாந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜயசாந்தி

மக்களை காங்கிரஸ் கட்சி தான் காப்பாற்ற வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் விஜயசாந்தி பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் பாஜகவில் இருந்து விலகும் விஜயசாந்தி காங்கிரஸில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

x