அரியலூர்: மின் கசிவு காரணமாக வகுப்பறையில் புகை மூட்டம் - மாணவ, மாணவியர் மயக்கம்


சிகிச்சை பெறும் குழந்தைகளை பார்வையிட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி.

அரியலூர்: பள்ளி வகுப்பறையில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு புகைமூட்டம் உருவானதால் பள்ளி மாணவ - மாணவியர் 27 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.

அரியலூர் அடுத்த தேளூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் இங்குள்ள ஒரு கணினி அறையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வகுப்பறையில் இருந்த 27 மாணவ - மாணவியருக்கு மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

தகவல் அறிந்த ஆட்சியர் பொ.ரத்தினசாமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளை நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களை அறிவுறுத்தினார்.

x