8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!


புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரி

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 49 பல்வேறு பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளதால் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 49 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.02.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்லூரி மருத்துவமனையின் இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நியமனக்குழு, அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளூர், புதுக்கோட்டை - 622004 என்ற முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.

காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் வருமாறு: பல் மருத்துவ இருக்கை உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை 10, இதற்கான கல்வித் தகுதி டிப்ளமோ நர்சிங் படித்திருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.12,480.

கணினி இயக்குபவர் பணிக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1. கணினி தரவு நுழைவு ஆப்ரேட்டர் பணியிடங்களின் எண்ணிக்கை 1. இவற்றிற்கான கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளம் ரூ.17,430.

துறைச் செயலாளர்கள் காலியிடங்களின் எண்ணிக்கை 4. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியல் மற்றும் புள்ளியியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.14,430.

துப்புரவு மற்றும் தூய்மைப் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 10. இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.12,480.

உதவியாளர் மற்றும் பாதுகாப்பு பணியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை 23. இதற்கு 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.12,480. இப்பணிகளுக்கு தகுதியானவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x