இஸ்லாமியக் கைதிகள் உட்பட 12 பேர் விடுதலை... முதல்வருக்கு ஜவாஹிருல்லா நன்றி!


ஜவாஹிருல்லா

நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகள் உட்பட 12 பேரின் விடுதலைக்கு முழு முயற்சி எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு மனித நேய மக்கள் மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

தமிழக சிறைகளில் வாடும் இஸ்லாமிய கைதிகள் 10 பேர் உட்பட 12 பேருக்கு விடுதலை அளிக்கும் மசோதாவை, தமிழக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த மசோதாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, கைதிகள் விடுதலைக்காக மசோதா நிறைவேற்றிய தமிழக அரசுக்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

ஆளுநர் ஆர்.என்.ரவி

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் சிறைகளில் நீண்ட காலமாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று நீண்ட காலமாகவே முஸ்லிம் சமுதாயம் கோரிக்கை வைத்து வந்துள்ளது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் வைத்த கோரிக்கையை ஏற்று, நீதியரசர் ஆதிநாதன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 20 முஸ்லிம்கள் உட்பட 49 நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்யத் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரை தொடர்பாக அறிக்கையில் ஆளுநர் தற்போது கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், 10 இஸ்லாமிய கைதிகள் உட்பட 17 பேர் விடுதலைபெற உள்ளனர். நீண்ட காலக் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சிய 9 முஸ்லிம்கள் 32 நீண்ட காலச் சிறைவாசிகளின் விடுதலை கோப்பில் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

x