விழுப்புரத்தில் புறப்படும் பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம் - முழு விவரம்


விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் பகுதியளவில் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் அறி விக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில் வேயின் திருச்சி கோட்ட மக்கள்தொடர்பு அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் திருச்சிகோட்டத்துக்குட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையத்தில் பல்வேறு பொறியியல் பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளன. இதன் காரணமாக பல்வேறு ரயில்கள் பகுதியளவில் ரத்து, முழுமையாக ரத்து, புறப்படும்இடம் மற்றும் வழித்தட மாற்றம்போன்றவை மேற்கொள்ளப்பட் டுள்ளன.

பகுதியளவில் ரத்து செய்யப்படுபவை: சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35-க்கு புறப்படும் சென்னை-எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரயில் (வ.எண். 06025) ஆக. 31, செப். 1 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத் தப்படும். எதிர் வழித்தடத்தில் புதுச்சேரியிலிருந்து மாலை 4-க்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் ரயில் (வ.எண்.06026) ஆக. 31, செப். 2 ஆகிய தேதிக ளில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்திலிருந்து மாலை 5.07 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்பட்டுச் செல்லும்.

திண்டுக்கல்லில் இருந்து விழுப்புரத்துக்கு காலை 5-க்கு புறப் படும் திண்டுக்கல்-விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண். 16868) ஆக. 31, செப். 2 ஆகிய தேதிகளில் விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். எதிர் வழித்தடத்தில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-திண்டுக்கல் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண். 16867) ஆக. 31, செப். 2 ஆகிய தேதிகளில் மாலை 5.50 மணிக்கு விருத்தாசலத்திலிருந்து திண்டுக்கலுக்கு புறப்பட்டுச் செல் லும்.

திருப்பதியிலிருந்து காலை 4-க்கு புறப்படும் திருப்பதி-புதுச்சேரி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண். 16111) ஆக. 31, செப். 2 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்துடன் நிறுத்தப் படும். எதிர் வழித்தடத்தில் புதுச் சேரியிலிருந்து பிற்பகல் 3-க்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி-திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில்(வ.எண். 16112) ஆக. 31, செப். 1 ஆகிய தேதிகளில் முண்டியம் பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.50-க்கு திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்லும்.

பகத் கி கோதி ரயில் நிலையத் திலிருந்து ஆக. 29-ம் தேதி மாலை4.10-க்கு புறப்படும் பகத் கி கோதி-மன்னார்குடி விரைவு ரயில் (வ.எண்.22673) விழுப்புரம் ரயில் நிலையத் துடன் நிறுத்தப்படும். விழுப்புரம்-மன்னார்குடி இடையேயான சேவை பகுதியளவில் ரத்து செய் யப்பட்டுள்ளது.

காட்பாடி ரயில் நிலையத்திலி ருந்து காலை 5.15-க்கு புறப்படும் காட்பாடி-விழுப்புரம் ரயில் (வ.எண். 06697), காலை 6.45-க்கு புறப்படும் காட்பாடி-விழுப்புரம் ரயில் (வ.எண். 06699) ஆகியவை செப். 1-ம் தேதி வெங்கடேசபுரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பிற்பகல் 2.30-க்கு புறப்படும் காக்கிநாடா துறைமுகம்-புதுச்சேரி விரைவு ரயில் (வ.எண். 17655),கச்சிக்குடாவிலிருந்து புதுச்சேரிக்கு மாலை 5-க்கு புறப்படும் கச்சிக்குடா-புதுச்சேரி விரைவு ரயில் (வ.எண். 17653) ஆகியவை செப். 1-ம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

எதிர்வழித்தடத்தில் புதுச்சேரியிலிருந்து காக்கிநாடா துறைமுகத்துக்கு பிற்பகல் 1.30-க்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி-காக்கிநாடா துறைமுகம் விரைவு ரயில் (வ.எண். 17656) செப். 2-ம் தேதி பிற்பகல் 3.55-க்கும், புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1-க்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி-கச்சிக்குடா விரைவு ரயில் (வ.எண். 17654) செப். 2-ம் தேதி பிற்பகல் 3.30-க்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

விழுப்புரத்திலிருந்து மாலை 2.30-க்கு மயிலாடுதுறைக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வ.எண்.06691) விழுப்புரம்-கடலூர் துறை முகம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் கடலூர் துறைமுகத்திலிருந்து பிற்பகல் 3.38-க்கு மயிலாடுதுறைக்கு புறப்பட்டுச் செல்லும்.

நிறுத்தி இயக்கப்படுபவை: திருப்பதியிலிருந்து முற்பகல் 11.55-க்கு புறப்படும் திருப்பதி-ராமேசுவரம் விரைவு ரயில் (வ.எண். 16779) ஆக. 31-ம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும். இதுபோல, புதுச்சேரியிலிருந்து மாலை 4.45-க்கு புறப்படும் புதுச்சேரி-மங்களூர் சென்ட்ரல் மெயில் விரைவு ரயில் (வ.எண். 16857) ஆக. 31-ம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 25 நிமிடங்களும், மதுரையிலிருந்து காலை 6.40-க்கு புறப்படும் மதுரை-சென்னை எழும்பூர் வைகை அதி விரைவு ரயில் (வ.எண். 12636) செப். 1-ம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 20 நிமிடங்களும், திருநெல்வேலியில் இருந்து காலை 6-க்கு புறப்படும் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (வ.எண். 20666) செப். 1-ம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 15 நிமிடங்களும் நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் இயக்கப் படும்.

இதேபோல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5-க்கு புறப்படும் திண்டுக்கல்-விழுப்புரம் விரைவு ரயில் (வ.எண். 16868) செப். 1-ம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 30 நிமிடங்களும், திருப்பதியிலிருந்து முற்பகல் 11.55-க்கு புறப்படும் திருப்பதி-ராமேசுவரம் விரைவு ரயில் (வ.எண். 16779), செப். 2-ம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 60 நிமிடங்களும், குருவாயூரிலிருந்து இரவு 11.15-க்கு புறப்படும் குரு வாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வ.எண். 12128) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் செப். 2-ம் தேதி 15 நிமிடங்களும், சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 3.45-க்கு காரைக்குடிக்கு புறப்படும் பல்லவன் அதிவிரைவு ரயில் (வ.எண். 12605) செப். 2-ம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 10 நிமிடங்களும் நிறுத்தி பின்னர் இயக்கப்படும்.

தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: விழுப்புரத்திலிருந்து மாலை 6.25-க்கு புறப்படும் விழுப்புரம்-திருவாரூர் பயணிகள் ரயில் (வ.எண். 06877) ஆக. 31, செப். 2 ஆகிய தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.55-க்கு புறப்படும். விழுப்புரம் ரயில் நிலை யத்தில் இருந்து மாலை 5.30-க்கு புறப்படும் விழுப்புரம்-திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண். 16870) செப். 2-ம் தேதி சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.15-க்கு புறப்படும். விழுப் புரத்திலிருந்து மாலை 5.50-க்கு புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி ரயில் (வ.எண். 06799) செப். 2-ம் தேதி சுமார் 35 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.25-க்கு புறப்படும்.

வழித்தட மாற்றம்: நாகர்கோவிலில் இருந்து நள்ளிரவு 12.30-க்கு புறப்படும் நாகர்கோவில்-கச்சிக்குடா சிறப்பு ரயில் (வ.எண். 07436) செப். 1-ம் தேதி விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மென்ட் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாகவிருத்தாசலம் ரயில் நிலையத்தி லிருந்து சேலம் ஜங்ஷன், ஜோலார் பேட்டை, காட்பாடி வழியாக இயக் கப்படும்.

முழுமையாக ரத்து: புதுச்சேரியிலிருந்து காலை 8.05-க்கு புறப்படும் புதுச்சேரி-விழுப்புரம் ரயில் (வ.எண். 06738), விழுப்புரத்திலிருந்து மாலை 5.50-க்கு புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி ரயில் (வ.எண். 06799), திருவாரூரிலிருந்து காலை 5.10-க்குபுறப்படும் திருவாரூர்-விழுப்புரம்ரயில் (வ.எண். 06690) ஆகியரயில்கள் செப். 1-ம் தேதி முழு மையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x