சென்னை | தனியார் நிறுவன பணியாளர் வீட்டில் 25 பவுன் திருட்டு


சென்னை: சென்னையில் தனியார் நிறுவன பணியாளர் வீட்டில் 25 பவுன் தங்கம், வெள்ளி நகைகள் திருடப்பட்டன. தரமணி கானகம், பெரியார் நகரைச்சேர்ந்தவர் ஆறுமுகம் (55).

இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் போர்மேனாக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 15-ம்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு, சொந்தஊரான சிதம்பரத்தில் நடைபெற்ற உறவினர் காதணி விழாவுக்கு குடும்பத் துடன் சென்றார்.

பின்னர், 18-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், உள்ளே இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த, 25 பவுன் தங்க நகைகள், 5 வெள்ளி மோதிரம், 3 வெள்ளி நாணயம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தரமணி காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் தெரிவித்தார். அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x