கீழப்பழுவூர் வேளாண் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ரூ.4.40 லட்சம் பறிமுதல் @ அரியலூர்


அரியலூர்: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரிலுள்ள வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

கீழப்பழுவூரிலுள்ள வேளாண் விரிவாக்கம் மைய அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் பொன்ராஜ், காவலர்கள் ரவி, இளையபெருமாள் என 8 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) எழில்ராணி அறையில் இருந்த கணக்கில் வராத ரூ.4.40 லட்சத்தை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து உதவி இயக்குநர் எழில்ராணி மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுதந்திர தின விழாவில், சிறப்பாக பணிபுரிந்ததாக வேளாண் உதவி இயக்குநர் எழில்ராணிக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

x