பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது: அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி!


அத்வானியோடு பிரதமர் நரேந்திர மோடி

பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்வானியோடு பிரதமர் நரேந்திர மோடி

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளது. இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அத்வானியை தொலைபேசியில் அழைத்து அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். நாம் வாழும் காலத்தில் மிகவும் மரியாதைக்குரிய அரசியல் தலைவராக திகழ்கிறார்.

இந்தியாவிற்கு இவரது பங்களிப்பு என்பது ஏராளம். தனது வாழ்க்கையை மிகவும் கீழ்மட்டத்தில் இருந்து தொடங்கி துணை பிரதமர் பதவி வரை உயர்ந்துள்ளார்' என்று மோடி பதிவிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி இந்தியாவில் பாஜகவை மீண்டும் எழுச்சி பெற வைத்தவர். மத்தியில் பாஜகவை மீண்டும் ஆட்சி பொறுப்பில் ஏற்றியவர். துணைப் பிரதமராகவும் பதவி வகித்தவர். ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை இந்திய அளவில் இயக்கமாக மாற்றி அதற்காக ரதயாத்திரை உட்பட கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்.

அத்துடன் பாபர் மசூதி இடிப்பு, கரசேவையிலும் மிக முக்கிய பங்கு வகித்தார். அவர் மோடி மற்றும் பாஜக தலைமையால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய பாஜக அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிப்.12-ம் தேதி பட்ஜெட் கூட்டம்... ஆளுநர் ரவிக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

x