திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள் @ வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழா


திருச்சி: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி- திருவனந்தபுரம்இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து விழாக்கால சிறப்பு ரயில் (06115) ஆக.21, 28, செப்.4 ஆகிய நாட்களில் பிற்பகல் 3.25 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும்.

எதிர்வழித் தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து விழாக்கால சிறப்பு ரயில் (06116) ஆக.22, 29, செப்.5 ஆகிய நாட்களில் இரவு 7.10 மணிக்குப் புறப்பட்டு, திருவனந்தபுரம் சென்ட்ரலை மறுநாள் அதிகாலை 6.55 மணிக்குச் சென்றடையும்.

இந்த ரயில்கள், திருவனந்தபுரம் சென்ட்ரல், நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

x