தென்காசி மாவட்டத்தில் ஆக.23-ல் உள்ளூர் விடுமுறை


தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, தென்காசி மாவட்டத்துக்கு வரும் 23-ம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக ஆட்சியர் அறிவித் துள்ளார்.

இது குறித்து, தென்காசி ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

அன்றைய தினத்தில் அரசு தேர்வுகள் ஏதும் இருப்பின், சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர் பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கி களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு, அரசு கோப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்.

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 21-ம் தேதி தென்காசி மாவட்ட த்துக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுறது என தெரி வித்துள்ளார்.

x