பொது சிவில் சட்டம் அவசியம்: இந்து முன்னணி வலியுறுத்தல்


சென்னை: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை: பொது சிவில் சட்டம் தேசப் பிரிவினையை ஏற்படுத்தும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

“மதம் என பிரிந்தது போதும்” என்று ஒரு பக்கம் வசனம் பேசுவது. மறுபுறம் மதத்துக்கு ஒரு சட்டம் வைத்துக்கொண்டு மத பிரிவினை எனும் தீமையை வளர்ப்பது எந்த வகையான அரசியல் என்பதை மக்கள் உணர வேண்டும்.

உண்மையில், பொது சிவில் சட்டம் உருவாகும் போதுதான் மக்கள்தொகை பெருக்கத்தின் சமமற்ற நிலைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, பிரதமர் கூறியதுபோல, தேசம் முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும்.

x