இபிஎஸ் பெயர் பொறித்த கல்வெட்டு இடிப்பு.. சேலத்தில் பரபரப்பு!


கல்வெட்டு இடிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள பவளத்தானூரில் கடந்த 2019-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓமலூர் முதல் சங்ககிரி வரையான புறவழி சாலையை தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து இந்த சாலை மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ஓமலூர் - சங்ககிரி சாலை

இந்த புறவழிச் சாலையை தொடங்கும் போது நினைவு கல்வெட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் அந்த கல்வெட்டை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர். இத்தகவலை அடுத்து தாரமங்கலம் அ.தி.மு.க. தொண்டர்கள் பரபரப்பாக அந்த இடத்தில் கூடினார்கள். தாரமங்கலம் காவல்துறை ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையிலான காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். .

இடிக்கப்பட்ட கல்வெட்டின் ஒரு பகுதி

இதுகுறித்து தாராமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் காங்கேயன் கூறும் போது, முன்னாள் முதல்வர் எடப்பாடியார் வைத்த கல்வெட்டை மர்ம நபர்கள் உடைத்து விட்டார்கள். மீண்டும் நெடுஞ்சாலை துறை சார்பில் கல்வெட்டை அமைத்து தர வேண்டும். இதை வலியுறுத்தி காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளோம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

மேலும், தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கும்,அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றாலும், நினைவு கல்வெட்டுகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்கின்ற அவநிலை இந்த சம்பவம் மூலம் கண்கூடாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றார். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

x