3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை; ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு


3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி முன்னிட்டு 3 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது என , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மருது பாண்டியர்களின் குருபூஜை விழா வரும் அக்டோபர் 27ம் தேதியும் தேவர் ஜெயந்தி அக்டோபர் 30ம் தேதியும் நடைபெற உள்ளது.

இதையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை

முன் அனுமதியில்லாமல் பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்திற்குள் எந்தவிதமான அசம்பாவிதம் சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அக்டோபர் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பினையும் மீறி மதுபான கடைகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவை குருபூஜை (கோப்பு படம்)

x