அரூர் பகுதியில் கனமழை: காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு


கோப்புப் படம்

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் பகுதி முழுவதும் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் மற்ற பகுதிகளில் சாரல் மழையுமாக பெய்தது.

நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பெய்த மழையில் அதிக பட்சமாக கம்பை நல்லூரில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தீர்த்தமலை - 16 மி.மீ., வெங்கடசமுத்திரம் - 12 மி.மீ., மோளையானூர் -11 மி.மீ., அரூர் 4 ரோடு - 5 மி.மீ., அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் 4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல் அரூர், கோட்டப்பட்டி, சிட்லிங், பொய்யப்பட்டி, அச்சல்வாடி, மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்தது.

தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், கோட்டப்பட்டி, சிட்லிங், சித்தேரி மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளன. காட்டாறுகளில் செம்மண் கலந்த வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது.

x