திருமாவளவன், எல்.முருகன், அண்ணாமலை திடீர் சந்திப்பு! நடந்தது என்ன?


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சிக்காத வகையில் தொல்.திருமாவளவன் பாஜகவை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் உயிரிழந்த பங்காரு அடிகளார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக திருமாவளவன் இன்று மேல்மருவத்தூர் சென்றார். அங்கு பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் அவரது மகன்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன் பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

பாஜக மூத்த தலைவர் கேசவ விநாயகம்

இந்த நேரத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் கேசவ விநாயகம் ஆகியோரை திடீரென சந்தித்தார். அப்போது ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொண்டு நலம் விசாரித்து கொண்டனர். அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருமாவளவனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார். இந்த நிலையில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை திருமாவளவன் சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரம் மட்டுமின்றி திமுக கூட்டணிக்கட்சிக்கும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

x