திருச்சி மாவட்டம், ரெட்டிமாங்குடி அருகே எம்ஜிஆர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம், ரெட்டிமாங்குடி அருகே எம்ஜிஆர் சிலைய நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலையை நள்ளிரவு அடையாளம் தெரியாம நபர்கள் சேதப்படுத்தி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்தனர். இதையடுத்து, அதிமுகவினர் கலைந்து சென்றனர். திருச்சி அருகே எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.