அண்ணாமலையின் நண்பர் அமர்பிரசாத் ரெட்டி திடீர் கைது!


அண்ணாமலையின் நண்பர் அமர்பிரசாத் ரெட்டி திடீர் கைது!

பாஜக பிரமுகரும், அண்ணாமலையின் நண்பருமான அமர்பிரசாத் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளது கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் நேற்று அகற்றினர். இதனை அகற்றும்போது பா.ஜ.க.வினர் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றிய தி.மு.க. அரசுக்கு தமிழக பா.ஜ.க. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

"தி.மு.க. அரசின் உத்தரவின் பேரில் நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த போலீஸாரை எதிர்த்து போராடிய சகோதர, சகோதரிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்கு தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். நவம்பர் 1ம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பா.ஜ.க. கொடிக்கம்பங்கள் நடப்படும். 10 ஆயிரமாவது கொடிக் கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி (100-வது நாள்) காவல் துறையினரின் தடியடியால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் விவின் பாஸ்கரன் முன்னிலையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட அதே இடத்தில் நடப்படும்" என்று கூறியிருந்தார் அண்ணாமலை.

இந்தநிலையில், அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை பாஜகவினர் தாக்கியதோடு, அதன் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதையடுத்து, ஜேசிபி வாகனத்தை தாக்கிய புகாரில் அமர் பிரசாத் ரெட்டி உள்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

x