பட்டம் விடும் திருவிழாவின் 2-ம் நாளில் பல்வேறு உருவங்களில் ராட்சத பட்டங்கள்


மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி கடற்கரை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் 3-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா 4 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பட்டம் விடும் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று பட்டம் விடும் கலைஞர்கள் மூலம் பல்வேறு வகையான பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இதில், சுறாமீன், பாண்டா கரடி, குதிரை, ஆக்டோபஸ், கழுகு, கொரில்லா குரங்கு, மான், எலி, பசு, சிங்கம், ஆமை உட்பட பல்வேறு வகையான உருவங்களில் ராட்சத பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இதனை, சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் நேரில் கண்டு ரசித்தனர்.

4 நாட்களும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பட்டங்கள் பறக்கவிடப்படும். 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு பட்டம் விடும் திருவிழாவில் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ. 200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக, முகப்பு பகுதியில் டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் www.tnikf.com என்ற இணையதள முகவரியில் ரூ.200 நுழைவு கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x