கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜக பங்கேற்கும் : அண்ணாமலை தகவல்


சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவினர் எப்போது பார்த்தாலும், பாஜகவை மையப்படுத்தி கூட்டணி பற்றியே பேசி வருகின்றனர். அவர்களின் பய உணர்வை அது காட்டுகிறது. இதைப்பார்க்கும் போது பாஜகவை, அதிமுகவினர் கூட்டணிபேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்களோ என சந்தேகம் எழுகிறது. எங்களுக்கு அதிமுக கூட்டணி வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறோம். அதிமுக என்ற கட்சியை நான் மறந்து ஓராண்டு ஆகிறது.

கருணாநிதியின் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க என்னையும், தமிழக முதல்வர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அழைத்தார். கலைஞர் கருணாநிதிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டும். அந்த விழாவில் தமிழக பாஜக நிச்சயம் பங்கேற்கும். கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுவது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.

x