ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் அடுத்த மாதம் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாட்களே இருப்பதால், போனஸ் எப்போது வழங்கப்படும் என்று ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
அதன்படி, தங்களது ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சி பிரிவு & கெசட் ரேங்க் இல்லாத 'பி' பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் வழங்கப்பட உள்ளது.
எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது குறித்த விரிவான அறிக்கையும் மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போனஸ் தொகை விரைவில் அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.