தேனி: மத்திய பட்ஜெட்டை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்


தேனியில் மதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.

தேனி: தேனி காமராஜர் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் விஎஸ்கே.ராமகிருஷ்ணன் தலைமை வகிக்க, சட்டத்திட்ட திருத்தக்குழு செயலாளர் எஸ்.ஆசைத்தம்பி, அவைத்தலைவர் பாஸ்கரன், பொருளாளர் பரசுராமன், துணைச் செயலாளர் எஸ்.எஸ்.பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க வேண்டும். நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜ மாணிக்கம், மணி, துரை சிங்கம், பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

x