அதிர்ச்சி... ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை பெற்ற 8,833 பேர் தகுதி நீக்கம்!


மகளிர் உரிமைத் தொகை பெற்ற பயனாளிகள்.

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற்ற 8,833 பேர் தகுதி முதநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. முன்னதாக ரூ.1 அனுப்பிஉறுதி செய்யப்பட்ட பின்னர், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதிபயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, இரண்டாவது மாதமான இந்த மாதம் 14-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்காக, இந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 56.5 லட்சம்குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன இதையடுத்து, தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு தெரிவித்திருந்தது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பத் தலைவிகள் இ-சேவை மையங்கள் மற்றும் இத்திட்டத்தின் திட்ட உதவிமையங்களில் குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்து வருகின்றனர். இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இத்திட்டத்தில் இம்மாதம் கூடுதலாக 5046 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடந்த மாதம் உரிமைத்தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள், தகுதியற்றவர்கள் எனக் கண்டறிந்து 8,833 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது பயனாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x