கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலையத்தில், தேச பிரிவினைக் கொடூரங்களின் நினைவு தினக் கண்காட்சி இன்று நடைபெற்றது.
1947 ஆகஸ்ட் 14ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நாளை தேச பிரிவினைக் கொடூரங்களின் நினைவு தினமாக அனுசரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து. கும்பகோணம் ரயில் நிலையத்தில், தென்னக ரயில்வே சார்பில், பிரிவினையின் போது, மக்கள் பாதிக்கப்பட்டதையும், அவர்கள் பட்ட துன்பத்தையும் சித்தரிக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை, கும்பகோணம் ரயில் நிலைய அதிகாரி வி.ரமேஷ், தென்னக ரயில்வே வணிக ஆய்வாளர் அகிலன் மற்றும் ஏராளமானோர் இன்று பார்வையிட்டனர். இதேபோல் திருச்சி கோட்டத்தில், தஞ்சாவூர் உள்பட 11 ரயில் நிலையங்களில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.