குலசேகரபட்டினம் இரண்டாம் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு 2000 ஏக்கர் வழங்கியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ’’இன்னும் இரண்டு ஆண்டுகளில் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் பணிகள் முடிவடையும், அதற்காக தமிழக அரசு 2000 ஏக்கர் நிலம் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
தமிழகம் தற்போது பல்வேறு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குவதாகவும், குறிப்பாக விண்வெளி மற்றும் பாதுகாப்பு தளத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
சென்னை, மதுரை, திருச்சி கோவை உள்ளிட்ட தமிழகத்தை சுற்றியும் தொழில் வழித்தடங்களை தமிழக அரசு அமைத்து வருவதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக கூறிய அவர், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா 50 ஆண்டுகள் பழமையானது என்றும் ஏவுகணைகள் ஸ்ரீலங்கா வழியாக செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது.
தற்போது குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் அமைத்தால் எளிதாக சிறிய ராக்கெட்டுகள் செல்வதற்கு உதவியாக இருக்கும் அதனை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திர கிரி ஏவுதளத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் தம்பதி கைது!
குட் நியூஸ்... ரூ.400க்கு சமையல் சிலிண்டர்; ரூ.5 லட்சம் காப்பீடு; முதல்வர் அறிவிப்பு!