சென்னை: தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 1.76 கோடிக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். பேருந்து பயணக் கட்டணம் கடந்த 2018-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், டீசல் செலவுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்கும் வகையில் ஆணையம் உருவாக்கப்பட இருப்பதாக தகவல்வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு இணையாக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க முடிவுசெய்திருந்தால், அது கடுமையாககண்டிக்கத்தக்கது. ஏழை, எளிய மக்கள் மீது தமிழக அரசுக்கு சிறிதும் இரக்கமே இல்லை என்பதைத்தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது’ என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘பேருந்து கட்டணத்தைஉயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழக அரசிடம் இல்லை.மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது’ என கூறப் பட்டுள்ளது.