ஆக.16-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 16-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். கூட்டத்துக்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிப்பார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். கூட்டத்தில், முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x