உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்!


வாடிவாசலில் இருந்து பாய்ந்து வெளியேறும் காளையை அடக்கும் காளை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஏற்கெனவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளைகளின் ஆட்டம் குறித்த புகைப்பட ஆல்பம் இதோ.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

x