ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டர் பக்கம் முடக்கம்... ஹேக்கர்களின் நோக்கம் என்ன?


தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் X வலைத்தள பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருவார். இந்நிலையில் நேற்று இரவு அவரது ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள் யார், எதற்காக முடக்கினார்கள் என்ற விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆளுநரின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

x