மகளிர் உரிமைத்தொகை இரண்டாவது தவணைத் தொகை இன்று பெண்களின் வங்கிக் கணக்கில் வர வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வங்கிகள் விடுமுறை என்பதால் இன்று கிடைப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்ய அரசு மற்றொரு வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் அக்டோபர் 18-ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம்.
இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை இரண்டாவது மாத தவணை ஆயிரம் ரூபாய் பணம் அக்டோபர் 15-ம் வழங்கப்பட இருந்த நிலையில் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஒருநாள் முன் கூட்டியே 14-ம் தேதியே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இன்று இரண்டாவது சனிக்கிழமை வங்கிகள் விடுமுறை தினம் என்பதால் இன்று வங்கிக் கணக்கில் வரவு வைப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது
அதனால் அக்டோபர் 16-ம் தேதியான திங்கட்கிழமை தான் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று பணத்தை எதிர்பார்த்து காத்திருந்த பெண்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.