ராமரின் வாழ்க்கையை மக்களிடம் கொண்டு சென்றதில் கம்பர் முன்னோடி: ராமேசுவரத்தில் ஆளுநர் ரவி புகழாரம்


ராமேசுவரத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் 'கம்பனில் இலக்கிய தாக்கம்' என்ற நூலை ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட இலங்கை இ.ஜெயராஜ் முதல்பிரதியை பெற்றுக் கொண்டார். | படங்கள் எல்.பாலச்சந்தர்.

ராமேசுவரம்: ‘ராமரின் வாழ்க்கையை சாமானியமக்கள் மனதிலும் கொண்டு செல்வதில் கம்பர் முன்னோடியாகத் திகழ்ந்தார்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

சிறுவயதில் எனது பாட்டி 100ஆண்டுகளுக்கு முன்பே ராமேசுவரத்துக்கு யாத்திரை வந்ததைப் பற்றியும், இங்குள்ள ராமாயண தொடர்புகளையும் எனக்கு கதைகளாகக் கூறினார். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒருமுறையாவது ராமேசுவரத்துக்கு வந்து வழிபட வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக உள்ளது. நவீன இந்தியாவை உருவாக்கிய அப்துல் கலாமும் இங்கேதான் பிறந்தார்.

கம்பர் கவிஞர் மட்டுமல்ல; ஒருசித்தர் மற்றும் மகரிஷியும் ஆவார்.வால்மீகியின் ராமாயணம் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. சம்ஸ்கிருதத்தை கற்றவர்களால் மட்டுமே வால்மீகி ராமாயணத்தைப் படிக்க முடிந்தது. ஆனால் கம்பர், ராமரின் வாழ்க்கையை, சாமானிய மக்கள் மனதிலும் கொண்டு சென்றதில் முன்னோடி. கம்பரின் பாரம்பரியம் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டும்.

நாம் வெவ்வேறு மொழி, இனம், மதங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால், நாம் ஒரே நாடாக, குடும்பமாக உள்ளோம். நமது பாரத நாட்டின் ஆன்மாவாக பகவான் ராமர் இருக்கிறார். அவர் நாட்டின் எல்லா இடங்களிலும் இருக்கிறார்.

நாம் உலகப் பொருளாதாரத்தில் 11-வது இடத்திலிருந்து, தற்போதுபிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் 5-வது இடத்துக்கு முன் னேறிஉள்ளோம். இனிவரும் காலத்தில்3-வது இடத்துக்கு முன்னேறுவோம். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

விழாவில், மருத்துவர் இரா.குலசேகரன் எழுதிய `கம்பனில் இலக்கிய தாக்கம்' என்ற நூலைஆளுநர் வெளியிட அதனை இலங்கை ஜெயராஜ் பெற்றுக் கொண்டார்.

‘திருஞானசீலர்’ விருது: பின்னர், கம்பர் புகழை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரப்ப பெரும்பங்காற்றிய அகில இலங்கை கம்பன் கழகத்தைச் சேர்ந்த இ.ஜெயராஜுக்கு ‘திருஞானசீலர்’ என்ற விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கம்பர் பிறந்த தேரழுந்தூர் மற்றும் கம்பர் மறைந்த நாட்டரசன் கோட்டையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் கம்பர் விழா நடத்த வேண்டும், என ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

முன்னதாக, கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர்ஆா்.என்.ரவி நேற்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள அரசு விருந்தினர்மாளிகைக்கு வந்த ஆளுநரைமாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

விவேகானந்தர் மண்டபம் வருகை: ராமநாதபுரத்திலிருந்து மதியம்பாம்பன் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி குந்துக்கால் கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் சென்றார். அங்கு, ஆளுநரை ராமகிருஷ்ணமடத்தின் ஸ்ரீமத் சுவாமி நியமானந்தா மகராஜ் வரவேற்றார். நினைவிடத்தில் விவேகானந்தரின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஆளுநர், அங்கிருந்த ஓவியக் கூடத்தையும், வாசக சாலையையும்பார்வையிட்டார். பின்னர் சுவாமிவிவேகானந்தரின் லட்சியங்கள், போதனைகள், நம்மை எவ்வாறுஊக்குவித்து, உற்சாகப்படுத்துகின் றன என்பது குறித்து மாணவர்களு டனான கலந்துரையாடலின்போது விவாதித்தார்

x