ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட சாலையில் 2 புலிக்குட்டிகள் சாவகாசமாக நடை பயின்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக இந்த பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலிகளின் எண்ணிக்கை வனப்பகுதியில் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதனால் புலிகள் காப்பகத்தின் வெளிப்புற பகுதிகளில் அடிக்கடி புலியின் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடம்பூரில் இருந்து மலைப்பகுதியில் உள்ள குன்றிவனம் கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் 2 புலி குட்டிகள் சாவகாசமாக நடை பயின்று கொண்டிருந்ததை பேருந்தில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர்.
உடனடியாக பேருந்தின் வேகத்தை குறைத்த ஓட்டுனர், புலிக்குட்டிகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை மிதமான வேகத்தில் பேருந்தை இயக்கியுள்ளார். தாய்ப்புலி அருகில் இல்லாமல், குட்டிகள் அப்பகுதியில் தனியாக சுற்றி திரிந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இருந்தவர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை