எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்: சபாநாயகரை முற்றுகையிட்டு அமளி.... அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்


சபாநாயகருடன் அதிமுகவினர் வாக்குவாதம் (கோப்பு படம்)

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் அதிமுக துணைத் தலைவர் இருக்கை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதன் மீது சபாநாயகர் தற்போது வரை முடிவெடுக்காத நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் அவை காவலர்களுக்கு உத்தரவிட்ட நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில், எங்களுடைய நியாயமான கோரிக்கையை சபாநாயகர் அப்பாவுவிடம் முன்வைத்துள்ளோம்.

சட்டப்பேரவையில் எந்த உறுப்பினரை எந்த இருக்கையில் அமரவைக்க வேண்டும் என முடிவு செய்வது சபாநாயகரின் தனிப்பட்ட அதிகாரம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், அதே நேரத்தில் சபாநாயகர் இதில் நடுநிலையோடு செயல்பட்டு எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

x