மீனவர் நலனுக்கான கடலோர வாழ்வாதார சங்கம் மூடல்: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்


சென்னை: மீனவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கத்தை மூடியிருக்கும் தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கடந்த 2004-ம் ஆண்டு, சுனாமிதாக்குதலில் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயப்பெருமக்களுக்கு, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்கவும், பொருளாதார இழப்புகளை ஈடு செய்யவும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ், கடந்த2020-ம் ஆண்டு டிச.19-ம் தேதி தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் தொடங்கப்பட்டது.

இந்தச் சங்கத்தின் மூலம், தமிழகம் முழுவதும் 236 கடலோரஊராட்சிகளில் வசிக்கும் மக்கள்பலனடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே இச்சங்கம் முடக்கப்பட்டது.

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு நடத்தியராமேசுவரம் மீனவர் மாநாட்டுக்காக மட்டும் உயர்ப்பிக்கப்பட்டது. தற்போது இது முடக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கம், மூடப்படுவதாக கடந்த15.03.2024 அன்று அறிவிக்கப்பட் டுள்ளது. மீனவ சமுதாய மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த சங்கம், எவ்விதக் காரணங்களும் குறிப்பிடாமல் மூடப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடலோரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில், திமுகவுக்கு எந்தஅக்கறையும் இல்லை. திமுக அரசின் இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து, மீனவ சமுதாய மக்கள் அறிவித்த போராட்டத்துக்கு அனுமதி கொடுக்காமல், கைது செய்வோம் என்று மிரட்டுவது, மீனவர்கள் மீது திமுகவின் வஞ்சத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, மீனவ மக்களுக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் போக்கை பாஜகவன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கத்தை மூடுவதாக வெளியிட்டிருக்கும் அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x