தமிழக பாஜகவிலிருந்து முக்கிய தலைவர் விலகல்; தொண்டர்கள் அதிர்ச்சி!


பாஜக மாநில தலைமை அலுவலகம்

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அக்கட்சியின் பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் பாண்டியன் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு பாஜகவில் பட்டியல் அணி மாநிலத் துணைத் தலைவராக இருப்பவர் பாண்டியன். இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து கட்சியில் நிலவும் சாதி பாகுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக கூறி, தனது விலகல் கடிதத்தை அளித்துள்ளார். அந்த கடிதத்தில், பாஜகவில் ஜாதிய பாகுபாடும் நவீன தீண்டாமையும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் பட்டியல் அணி நிர்வாகிகளை மதிப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கும் பாண்டியன், குடியரசுத் தலைவரை நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்காதது தனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கருத்து தெரிவித்து தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை, ஒவ்வொரு ஜாதியிலிருந்தும் முக்கியமான பலரையும் கட்சிக்குள் கொண்டுவரும் நிலையில் பாஜகவின் பட்டியல் அணியிலிருந்து முக்கியமான தலைவர் ராஜினாமா செய்திருப்பது கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x