ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: அதிமுகவினர் குஷி!


ஓபிஎஸ், இபிஎஸ்

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தீர்ப்பின் முழு விவரம் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அதிமுக முன்னணி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்ததால் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டார். இதன் பின்னர், அதிமுகவில் நிலவிய பல்வேறு குழப்பம் மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக்கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதிமுக அலுவலகம்

இந்த வழக்கில் அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த நவம்பர் 7-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரிக்கப்பட்டு இரு தரப்பு வாதம் நிறைவுற்றது.

ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ‘தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக் கோரிய பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், ‘இந்த விவகாரத்தில் உரிய நிவாரணம் பெறும் வகையில் தனி நீதிபதியை அணுக வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுவைச் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை தொடர்ந்து அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் களைகட்டி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் நெல்லை வரை பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

x