தமிழகத்தில் 24 கூடுதல் எஸ்.பி.க்கள் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு


சென்னை: உள்துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளியிட்ட உத்தரவு:

தஞ்சாவூர் மாவட்ட தலைமையிடத்து கூடுதல் எஸ்.பி.யாக இருந்த வி.ஜெயச்சந்திரனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு (1) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி தலைமையிட கூடுதல் எஸ்.பி.குத்தாலிங்கம், சென்னை தி.நகர் துணை ஆணையராகவும், மதுரைஉயர் நீதிமன்ற யூனிட் விஜிலென்ஸ் பிரிவு கூடுதல் எஸ்.பி எஸ்.விஜயகுமார், நெல்லை கிழக்கு துணைஆணையராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சென்னை சிறப்பு டிவிசன் எஸ்பிசிஐடி கூடுதல் எஸ்.பி ஜி.கார்த்திகேயன், சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாகவும். கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்.பி சி.சங்கு, போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட்டாகவும் தேனி மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்.பி வி.கார்த்திக்,பழநி சிறப்பு காவல்படை கமாண்டன்டாகவும் நியமிக்கப்பட்டனர்.

கடலூர் தலைமையிடத்து கூடுதல் எஸ்.பி எஸ்.அசோக்குமார், கோவை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராகவும், ராமநாதபுரம் தலைமையிடத்து கூடுதல் எஸ்.பி ஏ.அருண், மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்டாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை தலைமையிடத்து கூடுதல் எஸ்.பி கே.முத்துகுமார், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராகவும், தஞ்சாவூர் தலைமையிடத்து கூடுதல் எஸ்.பி. ஈஸ்வரன், சென்னை சைபர் டிவிசன்(3) எஸ்.பி.யாகவும், கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்.பி. கோமதி டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு ஏஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 24 கூடுதல் எஸ்.பி.க்களுக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

x