அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு... முதல்வரின் அசத்தல் அறிவிப்பு!


முதல்வர் ஸ்டாலின்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாட, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பு அறிவித்திருந்தார்.

தமிழக அரசு சார்பில் கடந்தாண்டு வரை 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் 1000 ரூபாய் கிடைக்காததை அறிந்த சர்க்கரை அட்டைதாரர்கள் கடும் கோபம் கொண்டு ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். பலருக்கு பரிசு தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்ட நிலையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x