எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 9,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல் 2,200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த சூழலில் நடப்பாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்பதிவு கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. இதற்காக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வந்தனர். இந்த படிப்புகளுக்கான இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுகு விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 9) கடைசி நாளாகும். இதனைத் தொடர்ந்து, விளையாட்டுப் பிரிவு இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு இன்று மற்றும் ஆக.12-ம் தேதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆக.19-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆக.21-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

x