வக்பு வாரிய சட்ட திருத்தம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது: இபிஎஸ், செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு


சென்னை: இஸ்லாமிய சமுதாயத்தினரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பலவிதமான சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி, ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிற வக்பு வாரியத்தின் சொத்துகளை முடக்கும் பாஜகவின் முயற்சி அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம்சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. அரசியலைமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது. முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துகளை அவர்களிடமிருந்து பறித்து அரசுநிர்வகிக்க நினைப்பது தவறானது.அதுமட்டுமின்றி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை யும் அதனை நிர்வகிக்க ஒப்புதல்அளிக்கும் திருத்தம் ஏற்புடைய தல்ல.

வக்பு சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுசெல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஆகவே, மதச் சிறுபான்மையினருக்கு அரசியலமைப் புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: சிறுபான்மைசமூகத்தில் உள்ள முஸ்லிம் தனவந்தர்கள் சமூக நலனுக்காக நன்கொடையாக வழங்கிய சொத்துகளான வக்பு சொத்துகளை நிர்வகிப்பதில் வக்புவாரிய சட்டத்திருத்தத்தின் மூலம் மத்திய அரசு தலையிட முற்பட்டிருக்கிறது.

வக்பு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் பெண்களையும், இரண்டு முஸ்லிம் அல்லாதவர்களையும் அதில் உறுப்பினர்களாக நியமிக்கஇத்திருத்தம் வகை செய்கிறது. இது அப்பட்டமாக மத சுதந்திரத்தில் தலையிடுகிற செயலாகும். இந்த சொத்து குறித்து ஏதாவதுபிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்துமுடிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குகிறது. ஆனால், ஏற்கெனவே உள்ள வக்பு வாரிய சட்டத்தின்படி இதைமுடிவு செய்வது வக்பு தீர்ப்பாயம்தான்.

சொத்துகளை நிர்வகிக்கிற உரிமையை வக்பு வாரியத்திலிருந்து அபகரித்து மாவட்ட ஆட்சியர் மூலமாக பறிக்கிற முயற்சியில் பாஜகஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சியை முஸ்லிம் அமைப்புகளும், இந்தியாகூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன.

இஸ்லாமிய சமுதாயத்தினரின் நலன்களைப் பாதுகாக்கிற வகையிலும், பலவிதமான சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றி, ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிற வக்பு வாரியத்தின்சொத்துகளை முடக்குகிற முயற்சி அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மோடி அரசுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கிற வக்பு சட்ட திருத்தத்தைஉடனே திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்

x