கனமழை எதிரொலி... அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!


கடலூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (டிசம்பர் 07) முதல் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் கடலூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இந்த நிலையில் நேற்று இரவு முதலே கடலூரில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சீர்காழி மற்றும் சிதம்பரத்தில் தலா 22 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. கடலூரில் அதிகாலை 2.30 மணி நேர நிலவரப்படி சுமார் 82 மில்லிமீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி வரை இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக கடலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் மாணவர்கள் நலன் கருதி ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

x