29 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்பட 29 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சென்னையில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் சென்னையில் சமாளிக்க கூடிய வகையில் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

x