அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே இவர்தான்- அமைச்சர் ரகுபதி வெளியிட்ட தகவலால் பரபரப்பு


அமைச்சர் ரகுபதி

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை கவிழ்க்கும் வேலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்து வருகிறார் என அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ரகுபதி-விஜயபாஸ்கர்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதில் இருந்தே தமிழகத்தின் ஏக்நாத் ஷிண்டே யாராக இருக்கும் என வலைதளங்களில் வரிசைக்கட்டி நெட்டிசன்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது பங்கிற்கு கொளுத்திப் போட்டுள்ளார்.

நேற்று இரவு நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘’அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை கவிழ்க்கும் வேலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு விஜயபாஸ்கர் தூது அனுப்பிக் கொண்டு இருக்கிறார். அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே விஜயபாஸ்கர் தான்.

மேலும் ராத்திரி 11 மணிக்கு மேல் என்ன செய்துக் கொண்டிருப்பார் தெரியுமா? வசூலான பணத்தை எண்ணிக் கொண்டிருப்பார்’’ என்றார். அமைச்சரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

x